உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் கொலை மூன்றாவது சந்தேக நபரும் கைது..!

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்
கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினமே சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஏனைய இருவர் தொடர்பிலும் தகவல்களை பொலிஸார் பெற்ற நிலையில் மறுநாள் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றவது நபர் கைதடி பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp