உள்ளூர் செய்திகள்

குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு ஆளுநர் உறுதி.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விவசாயம் மற்றும் கடற்றொழில் வட மாகாணத்தின் முக்கியமான தூண்கள்.

 

இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன்.
அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா.சுதர்சன் அவர்களும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற கௌரவ இ.சந்திரசேகர் அவர்கள், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர்.கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.

அதன் தேவைப்பாட்டை தாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதை செயற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

நீங்கள் இன்றைய தினம் ஓய்வுபெற்ற மீனவர்களை கௌரவிக்கின்றீர்கள். அது பாராட்டப்படவேண்டிய விடயம்.
இவ்வாறான உதவிகளை செய்வது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தேவையானது. இந்தப் பிரதேசத்தின் – கடற்றொழிலாளர்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தாங்கள் பணியாற்றுவோம் என வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

 

https://pathivunews.com/

https://www.virakesari.lk/

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp