செய்திகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் 24 மணித்தியாலங்களும் சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

குடிவரவு – குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (18) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இனிவரும் நாட்களில் நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை முதல் பத்தரமுல்லை வரையில் இலங்கை போக்குவரத்து சபையின் இரவு நேர பஸ் சேவையை இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுக்கான அவசர தேவை கொண்டவர்கள் மாத்திரம் அலுவலகத்துக்கு வருகைதந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறும், தற்போது போதுமான கடவுச்சீட்டுக்கள் கையிருப்பில் உள்ளதால் வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படாதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகம் ஒன்றை புதிதாக திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp