முக்கிய செய்திகள்

கிளிநொச்சி கடலிலும் இந்திய மீனவர்களின் கடலழிப்பு தொடர்கின்றது

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(26) நேற்று அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் நேற்று (26) மாலை ஒப்படைக்கப்பட்டனர்

கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த 33 பேரையும் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வாசல் தலத்தில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து குறித்த 33 பேரையும் எதிர்வரும் 05திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp