உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காலி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்.

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

காலி, தடல்ல மயானத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவன் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தலைமறைவாகியிருக்கும் சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காலி பொலிஸ் நிலையத்தின் 071 – 859 1452 அல்லது 091 – 223 3217 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களின் விபரங்கள் பின்வருமாறு

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp