ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான நிதி இழப்புகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கி மக்கள் சக்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆனைக்குழுவில் முறையிட பரிசீலிக்கிறதென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கவிரத்ன தெரிவித்துள்ளாhர்
புதிய பாடத் தொகுதிகளை தயாரித்து அச்சிடுவதில் ஏற்பட்ட செலவுகள் தற்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதால், இழந்த நிதியைப் பொறுப்பானவர்களிடமிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.
சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கவிரத்ன,
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நாடாளுமன்றம் போன்ற தொடர்புடைய தரப்புகளுடன் ஆலோசனை இல்லாமல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அச்சிடல், விநியோகம் உள்ளிட்ட செலவுகள் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொறுப்பாளர்கள் கணக்குக்காகக் கேட்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்கள் அவசியமானவை என்றாலும், அவை வெளிப்படையாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும், இது தொடர்பாக தமது கட்சிக்கும் ஆதரவு வழங்கும் வாய்ப்பை வழங்கவில்லை என்பதையும் தெரிவித்தார்.
கல்வி துறையுடன் தொடர்புடைய நிபுணர்கள் முறையாக இணைக்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் முக்கிய பதவிகளுக்கான தகுதிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பி, தகுதி இல்லாதவர்கள் பொறுப்பில் இருந்தால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, இதுவரை சுமார் ஒரு பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், மீளாய்வுக்குப் பின்னர் பாடத் தொகுதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் மேலும் நிதி தேவைப்படும் என்றும், இழப்புக்குப் பொறுப்பானவர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சர்வஜன அதிகாhரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, கல்வி சீர்திருத்தங்களை ஒத்திவைக்காமல், ஒவ்வொரு பாடத் தொகுதியையும் முன்மாதிரி திட்டமாக செயல்படுத்திய பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார்.
இந்த விமர்சனங்கள், கல்வி அமைச்சு சமீபத்தில் அறிவித்த ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைத்த நடவடிக்கையின் பின்னணியில் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதுடன், முதலாம் தர பாடத்திட்டத்தில் புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் சேர்த்து ஜனவரி 29ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
