உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் பதவி யாருக்கு? இன்று தீர்மானம்

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேராசிரியர் வசந்த சேனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து உறுதிப்படுத்திய உறுப்பினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் சில உறுப்பினர்கள் சூம் தொழில்நுட்பம் வழியாக இணைந்தனர்.

வெற்றிடமாகவுள்ள உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவியை நிரப்புவதற்கான இறுதி முடிவு நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், அந்த விவகாரம் அடுத்த கூட்டத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

அரசியலமைப்பு சபையில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிமல் ரத்நாயக்க, இன்றைய கூட்டத்தில் அந்த நியமனம் மீண்டும் பரிசீலனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp