உள்ளூர் செய்திகள்

கடற்தொழிலாளர் பிரச்சனை  பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர் சங்க தலைவர்களின்  பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது

இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று  ஆரம்பமாகியது.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கியபிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின்,தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ்,பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ், செயலாளர் முகமட் ஆலம், ஊடகபேச்சாளர் அ.அன்னராசா, செயற்குழு உறுப்பினர்வீ, சுப்பிரமணியம்,பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp