ஓட்டமாவடி பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் “இப்தார்” நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் ரிவர் பாக்கில் நேற்று(03.03.2026) மாலை இடம் பெற்றது.
இப்தார் நிகழ்வில் நோன்பின் முக்கியத்துவம் தொடர்பாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது தெளிபுபடுத்தினார்.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.பாறூக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.சஜ்ஜாத் அஹமட், பிரதேச சபை உறுப்பினர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பிரஜா சக்தி தவிசாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச செயலாளர்கள் உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


