உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு ; பாதிவழிதான் வரலாம்; அருச்சுனா எம்பி நாடாளுமன்றில் ஆதங்கம்..!

e0ae8ee0aeb0e0aebfe0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d e0aea4e0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8de0aeaae0aebee0ae9fe0af81 e0aeaa | Pathivu News

வெளிமாவட்டங்களில் இருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வரும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு தமக்கு வெறும் 15 லீற்றர் பெட்ரோல் மாத்திரமே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

“இந்த எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு, நான் இடையில் அனுராதபுரத்தில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த வாரமே கொழும்புக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்” என அருச்சுனா எம்பி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இந்த விடயம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைத்தவுடன் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் நாளை(18.03.2026) கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp