இந்தியா செய்திகள்

எனது பேச்சில் ஒரு பகுதியை மட்டும் வைத்து அனைவரும் குறை கூறுகின்றனர் – அமித் ஷா.

மாநிலங்களவையில் பேசும்போது அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தனது பேச்சு திரித்து கூறுவதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார்.
அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது,

அம்பேத்கரை காங்கிரஸ் கௌரவிக்கவில்லை.
நேரு அம்பேத்கரை வெறுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின்னர்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எனது பேச்சில் ஒரு பகுதியை மட்டும் வைத்து அனைவரும் குறை கூறுகின்றனர்.
உண்மைகளை திரித்து கூறுவதே காங்கிரசாரின் வேலை.

காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை பாஜக பேச்சாளர்கள் நாடாளுமன்றத்தில் நிரூபித்தனர்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது.

அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது.
என்னுடைய ராஜினாமா காங்கிரஸ் கட்சியின் எந்த பிரச்சனையையும் தீர்க்கப்போவது இல்லையென உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/@pathivunews

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp