Monday, December 23, 2024
Homeஇந்தியாமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.

இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சிற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ‘யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.


சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவராகும் அம்பேத்கர்…அம்பேத்கர்… அம்பேத்கர்… என்ற அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

https://x.com/tvkvijayhq/status/1869336738063057087

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments