சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை மீள நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த அவமதிப்பு நாமல் ராஜபக்ஷவை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், முழு சட்ட அமைப்பையும் குறிவைத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியதாக நிரூபிக்கப்பட்டால் சபையை விட்டு வெளியேறுவேன் எனவும் அதனை நிரூபிக்க முடியாவிட்டால் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை! – ஜனாதிபதி
https://www.youtube.com/shorts/u-gt4Ja5lgE?feature=share