உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தம்மிக மற்றும் அர்ஜுனவிற்கு குற்றப்பத்திரிகை..!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு இன்று (23.03.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை மாநாட்டை மே மாதம் 15ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் திகதி குறித்தது.

2017 – 2018 காலப்பகுதியில், ஆறு மாத காலத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நாட்டிற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 03 நீண்டகால டெண்டர்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதிக விலையிலான 27 உடனடி டெண்டர்களை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதற்குத் துணையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்