முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விடுதலைக்கான பரிந்துரையை சட்டமா அதிபர் ரத்து செய்துள்ளார்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் மூலம் இன்று அறிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பரிந்துரையை தற்காலிகமாக இரத்து செய்வதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp