உள்ளூர் செய்திகள்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது- யாழ் வணிகர் கழகம்

உள்ளூர் வகை அரிசி எம்மிடம் தாராளமாக இருக்கின்றது அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இறக்குமதி அரிசியிலேயே தற்போது பிரச்சனை நிலவுகின்றது என யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வெளியூர் அரிசிகளின் விலை மற்றும் தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண வணிகர் கழக உப செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலை காரணத்தினாலே தற்போது பிரச்சினை நிலவுகின்றது.

கொழும்பில் வாங்கும் அரிசியை நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரும்போது அதற்கு போக்குவரத்து கூலி உள்ளிட்ட செலவுகள் ஏற்படுகின்றது.

அவ்வாறு வரும்போது அதனை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்பனை செய்ய முடியாது.

இதனை அரசாங்கம் கவனத்திற்கு எடுத்து செயல்பட வேண்டும்.

சம்பா கீரிசம்பா ,வெள்ளை பச்சை விற்பனையிலிருந்து நாங்கள் தற்காலிகமாக விலகி இருக்க வேண்டி வரும் என்றார்.

இதையும் படியுங்கள்>மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

https://www.youtube.com/@pathivunews/videos

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp