Sunday, January 5, 2025
Homeஉள்ளூர்மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

மட்டக்களப்பு, மாநகர சபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!!

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை நேற்று (01) திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்..

அதனைத் தொடர்ந்து புதிய ஆணையாளர் என்.தனஞ்சயன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அதன் பின்னர் 2025 புதிய வருட கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள் அனைவரும் அரச சேவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் என். தனஞ்சயன் உத்தியோகத்தர்கள் மத்தியில் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார்.

அதன் பின்னர் ‘கிளீன் சிறீலங்கா’ எனும் தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற தேசிய நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் திரையில் நேரலையாக திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக என்.தனஞ்சயன் தனது கடமைகளை பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில், மாநகர சபையின் கணக்காளர், பொறியியளாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், மாநகர சபை சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments