டாவோஸ், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் தொழில் அமைச்சர் மற்றும் துணை நிதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் பங்கேற்றார்.
இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
