உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் அதற்கு உதவியவர்களையும் வெளிப்படுத்துமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடுரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர் பேரவை இதனை தெரிவித்துள்ளது.

2025ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிசெய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்க்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார் அவர்களிற்கு உதவியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவதாகயிருக்கவேண்டும் என வலியுறுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp