உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு..!

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 சித்திரை 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தின்படி, 2026 மாசி 28 முதல் சித்திரை 21 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்-நுழைவு விசாக்கள் தானாகவே சித்திரை 30 வரை நீடிக்கப்படும் என்பதுடன், இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விசா செல்லுபடியாகும் காலம் இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் அமைப்பில் தோன்றும் என்பதுடன், அந்த காலப்பகுதிக்குள் எல்லைகளின் ஊடாக மீண்டும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் ஆகியன இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அபாய எச்சரிக்கை சத்தம் கேட்கும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான இடங்கள் இல்லாத பட்சத்தில், பலமான சுவர்களைக் கொண்ட இடங்களில் தஞ்சம் புகுவதும், கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து தூர விலகி இருப்பதும் அவசியமானது எனவும் மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp