உலகம் செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது.
இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐக்கிய நாடுக்ள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்துள்ளது. அதேபோல், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
ஒரே நாளில் இஸ்ரேல் மீது 250-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://pathivunews.com/

https://tamilwin.com/

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp