உள்ளூர் செய்திகள்

இலங்கை இந்திய அரசுகள் பேச வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால் தமிழ்நாட்டிலும் வட மாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இரு நாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளோம்.

இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

இரு நாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே. எனவே, இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியுள்ளோம்.

இதன் அடுத்தகட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டுசென்று அதனூடாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம்.

அதேபோல தொடர்ச்சியாக இருநாட்டு மீனவர்களும் கலந்துரையாடுவதுடன், இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது.

அத்துடன் தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

எனவே, இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அனுசரணையோடு மிக விரைவில் எட்டப்படும், எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாளவேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும் என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp