உள்ளூர் செய்திகள்

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான இன்னமும் நிறையசெய்யவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

முள்ளிவாய்க்காலின் யுத்தசூன்ய வலயத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல்களிற்கு எதிர்ப்புதெரிவித்து 2009 ம் ஆண்டு லண்டனில் தமிழ் சமூகம் எவ்வாறு அணிதிரண்டது என்பது எனக்கு நினைவிருக்கின்றது என தெரிவித்துள்ள மிட்சாம் மற்றும் மோர்டனிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டோனா இலங்கை அதிகாரிகளிற்கு எதிரான பிரிட்டனின் தடை சிறிய நடவடிக்கை போல தோன்றலாம் ஆனால் அது எதிர்காலத்திற்கான பெரும் நம்பிக்கையை வழங்குகின்றது என குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் நீதி மற்றும் சமாதானத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக பிரிட்டிஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவேன் என எப்பிங் பொரெஸ்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் நெய்ல் ஹட்சன் தெரிவித்தார்.

பிரிட்டனின் தடைகளை வரவேற்பதாக தெரிவித்த ஈஸ்தாமிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டைம்ஸ் பொறுப்புக்கூறலிற்காக இன்னமும் செய்யவேண்டிய விடயங்கள் உள்ளன என குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp