இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தொடர்ந்து, நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
இதில் மீனவ சங்கத் தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும், அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள், வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் அழைப்பின் பேரில் சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு ஆட்சியக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அதற்கு ஒப்புக்கொள்ளாமல், போராட்டத்தை தொடர்வதாக கூறிவிட்டுச் சென்றனர்.
தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp