2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது 2024ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும், 2025 மே மாதத்தில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
