உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர்..!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த அவரை (Masato Kanda) நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் இங்கு வருகை தந்துள்ளதாகவும்

இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் திரட்டுவதன் மூலம் இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இந்த முன்னுரிமை விடயங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் மசாடோ காண்டா (Masato Kanda) பதிவிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்