உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் வினோத உலகம்

இலக்குகளை அடையும் வரை ஈரானில் தாக்குதல் தொடரும்..! ட்ரம்ப் திட்டவட்டம்

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான 9 கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரித்தானிய மற்றும் அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் பலவற்றின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்