அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மக்கள சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பின்வரும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள’ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
T 56 துப்பாக்கிகள் – 7
பிஸ்டல் ரக துப்பாக்கிகள் – 10
ரிவால்வர்கள் – 14
வெடிமருந்துகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் – 461
போர 12 ரக துப்பாக்கிகள் – 58
கல்கடஸ் – 13
ரிப்பீட்டர்கள் – 2
கடந்த 2 மாதங்களுக்குள் 354 கிலோகிராம் ஹெராயின், 3,847 கிலோகிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொக்கெய்ன், 181.9 கிலோகிராம் குஸ் மற்றும் 759 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவையும் மீட்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நிதி குற்றப் பிரிவு அடுத்த வாரம் மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ள 29,000 கோப்புகளில் இருந்து நிதிக் குற்றக் கோப்புகளை அந்தப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
