சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்ததாவது, இந்த குழுவினர் இன்றே நாட்டில் நுழைந்து, ஜனவரி 28ஆம் திகதி வரை இங்கே தங்கி பணியாற்றுவார்கள்.
குழுவின் முக்கிய நோக்கம், அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிடுவது ஆகும்.
மேலும், நாட்டின் பொருளாதார மீட்பு உத்திகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு, லங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பான கொள்கை விவாதங்களிலும் குழு பங்கேற்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
