சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபால் நிலைய வீதியில் நேற்று இரவு (18.02.2026)புதன்கிழமை இரவு வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டுக் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களும் அடித்து சேதமாக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் ஒருவருடைய வீடு ஒன்றிலேயே இவ்வாறு அசம்பாவிதம் இடம்பெற்றுள்ள நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

