இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 13வது வரவுசெலவுத் திட்டம் இன்று காலை இந்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
அண்டை நாடுகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்காக 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை பூடானுக்கு 20.68 பில்லியன் ரூபாயும் நேபாளுக்கு 7 பில்லியன் இந்தியன் ரூபாயும் மாலத்தீவுக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வரவு செலவு திட்டத்தைநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக சமர்ப்பித்தார். மேலும், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமையன்று முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயநிறைவு இந்தியா) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரவுசெலவுத் திட்டம் மூன்று முக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய அதிர்வுகளை எதிர்கொள்ள பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது, தேசிய செழிப்பில் மக்களை பங்குதாரர்களாக இணைப்பது மற்றும் வளங்களை எல்லா பிராந்தியங்களுக்கும் குடும்பங்களுக்கும் சமமாகப் பகிர்வது ஆகியவை அதில் அடங்குகின்றன.
அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி விகிதமும் 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
