அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (21) மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி, பெப்ரவரி 13ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைகள் காரணமாக, பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 02ஆம் திகதி வரை பாடசாலைகள் மீண்டும் மூடப்படும்.
இதேவேளை, ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகள் மார்ச் 22ஆம் திகதி வரை மூடப்பட்டே இருக்கும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
