ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை,சந்தித்தார்.
கடந்த 26ஆம் திகதி முதல் அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்து தொடர்கின்றனர். தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் உணவு தவிர்ப்பினால் சில போராட்டக்காரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, உடல்நிலை மோசமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
