உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்படும்..!

இன்றைய தினம் (23.3.2026) ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பல பிரதேசங்களில் பேருந்து சேவைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகளின் பேருந்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதால், பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்க முற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான அனைத்துப் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் பாரிய குறைபாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பேருந்து கட்டணத் திருத்த யோசனை இன்று மாலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் புதிய கட்டண விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான மட்டத்தில் அதிகரிப்பதற்கான அனுமதியை ஆணைக்குழு கோரியுள்ளது.

இதற்கமைய, ஆரம்பக் கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை சுமார் 350 கட்டண நிலைகளை உள்ளடக்கிய புதிய கட்டணப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிலான் மிருண்டா மேலும் சுட்டிக்காட்டினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp