முக்கிய செய்திகள்

அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஒப்புதல்

காணி விடயத்தில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (Pயுசுடு)ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்த மக்களின் வலி வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது.

காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை

அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் , மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் . ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp