நேற்று முன்தினம் ( 30-09-2026 ) மாலை 7.00.மணியளவில் JC’s Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5 என்னும் முகவரியில் தளிரின் ஊடக சந்திப்பும இடம்பெற்றது.
இன் நிகழ்வில் திரையிசைப் பின்னணி பாடகரும் கலைமாமணி உன்னிமேனன் அவர்கள் கலந்து கொண்டு நடை பெறவிருக்கும் ஒக்டோபர் 3 ஆம் திகதி 2026 அன்று மாலை 5.00 மணியளவில் தமிழிசைக் கலாமன்றத்தில் நடை பெறப்போகும் சலங்கையும் சங்கீதமும் ( சீசன்-2 ) நிகழ்வு மற்றும் அரும்புகள் மலரும் ஓசைகள் நிகழ்வில் வெளிவரவுள்ள பாடல்கள் பற்றியும் தனது கருத்துரையில் முன் வைத்து உரையாற்றினார்.
மற்றும் முன் அவையினை அலங்கரிக்க தளிர் குழுமத்தின் தலைவர் தாசு சண்முகலிங்கம் , தளிர் பிர்தம ஆசிரியர் சி.சிவமோகன் தளிர் பிரதம ஆலோசகர் இ.பாலசுந்தரம், செயலாளர் பிரபா ,உதவி செயலாளர் கயேந்தினி ,பொருளாளர் மலர் , தளிர் நிகழ்ச்சி திட்டமிடல் இணப்பாளர் சங்கர் ஆகியோருடன் இசை ஆரியர் சித்திராங்கி , JC , மண்டப உரிமையாளர் யூட் , சட்டத்தரணி பூரணி சொர்ணபாலா, குயீன் பேலசு மண்டப உரிமையாளர் தீபா & வசந்த், மற்றும் பின்னணிப் பாடகி யனணி பரத்வாச், வீடு விற்பனை முகவரும் தமிழ் ஆர்வலருமான இருதயநாதன், இவர்களுடன் தளிர் வானொலி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களான ராச் கணேசு , K.S.ரகு ஆகியோரின் முன்னிலையில் இடம் பெற்ற தளிர் நிகழ்வின் அறிமுகவிழாவில் கல்வி மான்கள் மற்றும் மூக்த ஊடகவியலாளர்கள் ஊடகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கல்நது கொண்ட நிகழ்வு இரவு விருந்துபசாரத்துடன் இனிதாக நிறைவு பெற்றது.


