செய்திகள் முக்கிய செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

  • Jan 8, 2025 - 03:56 PM
  • 0 Comments

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை விதித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுசன் சந்திரஜித் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை கொழும்பின் பல வீதிகளில் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூர் முக்கிய செய்திகள்

உரும்பிராயில் கூலித்தொழிலாளியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

  • Jan 7, 2025 - 08:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்றையதினம்(07-01-2025) உத்தரவிட்டது. கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். {{CODE3}} சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் […]

உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

  • Jan 7, 2025 - 10:44 AM
  • 0 Comments

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட […]

செய்திகள்

கிளிநாச்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 3, 2025 - 07:10 PM
  • 0 Comments

கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது நீங்கள் அறிந்ததே இந் நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று (02) உயிரிழந்தார். குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் 34 வயதுடைய குறித்த குடும்பப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. குடும்பத் தலைவரும் மற்றொரு மகனும் தொடர்ந்தும் சிகிச்சை […]

செய்திகள்

கிளிநொச்சியில் மட்டும் உண்மை முகம் காட்டும் பொலிஸ் பயங்கரவாதம்

  • Jan 3, 2025 - 02:26 PM
  • 0 Comments

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாராக இருந்தது. இதன் போது அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் அனுமதி பெற்று கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக […]

செய்திகள்

சிறை கைதிகள்,புலம்பெயர் தொழிலாளர்களின்,வாக்குரிமை உறுதி செய்ய வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

  • Jan 2, 2025 - 06:26 PM
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு புலம்பெயரந்து சென்றவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் ; சென்றவர்கள் அத்துடன் நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுறுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏலவே இது தொடர்பில் உத்தியோக பூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு

  • Jan 1, 2025 - 09:56 PM
  • 0 Comments

கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்காது நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அநுர அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஸ தெரிவிததுள்ளார் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்வித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ராஜபக்ஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை குறைப்பதால் பொருளாதார […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)30.12.2024

  • Dec 31, 2024 - 12:49 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம் தமிழகத்தற்கும் யாழ்ப்பாணத்திற்குமான கப்பல் சேவை 2ம் திகதி ஆரம்பம் புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மன்னாரில் கையெழுத்து போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன் https://youtu.be/JX8YzBkqb1I

செய்திகள்

தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன்

  • Dec 30, 2024 - 09:49 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும்; இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

செய்திகள்

அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை

  • Dec 29, 2024 - 10:05 PM
  • 0 Comments

அவர்கள் மாறுவதற்கு தயார் இல்லையெனில் அவர்களையும் மாற்றி எமது இந்த பயணத்தை முன்னெடுப்போம். அதற்காக எந்தவொரு சவாலையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய அருங்கலை பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கைவினைப்பொருடக்ளுக்கான விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; நாம் அரசாங்கத்தை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp