ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்டனர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடி நீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர். ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர். பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்க பொருத்தமற்ற […]









