sand mixed fish sale | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் மணல் கலந்த மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை..!

  • May 15, 2026 - 10:47 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , பிரதேசங்களில் உள்ள பொதுச் சந்தைகள் மற்றும் நடமாடும் மீன் விற்பனை வியாபாரிகள் குறித்த மீன்களை புதிதாக காட்டுவதற்காகவும் நிறையை மோசடி செய்வதற்காகவும் மண் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதில் கிரீ மீன் பாரைக்குட்டி மீன் […]

flood alert sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை..!

  • May 15, 2026 - 10:40 AM
  • 0 Comments

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15.05.2026) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர […]

bad weather impact | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – இருவர் உயிரிழப்பு ; 3500 பேர் பாதிப்பு..!

  • May 15, 2026 - 10:33 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் […]

mullivaikkal remembrance call | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் – தாயகச் செயலணி அழைப்பு..!

  • May 15, 2026 - 10:22 AM
  • 0 Comments

தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே அவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலை நாளாகிய மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை கடைப்பிடிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது எமது தமிழ் மக்கள் கொத்துக் […]

hatton school holiday | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!

  • May 15, 2026 - 09:58 AM
  • 0 Comments

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆ.சுமதி தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்ப​தை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கும் […]

21 reservoirs overflow | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

21 பிரதான நீர்த்தேக்கங்கள் இலங்கையில் வான் பாய்வதாக அறிவிப்பு..!

  • May 15, 2026 - 09:53 AM
  • 0 Comments

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம். ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம். குருநாகல் […]

japan supports fisheries | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்..!

  • May 15, 2026 - 09:48 AM
  • 0 Comments

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் […]

sl weather today 14 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • May 15, 2026 - 09:41 AM
  • 0 Comments

15.05.2026 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவான மிக பலத்த மழை […]

provincial election no delay | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை..!

  • May 14, 2026 - 12:57 PM
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு எண்ணப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கு நேற்று (13.05.2026) மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அழிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னைய காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்காக எல்லை நிர்ணயத்தை கொண்டு வந்தவர்களே, இன்று ஒன்று கூடி தேர்தலை பற்றி பேசுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

manmunai west coordination meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மண்முனை மேற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!

  • May 14, 2026 - 12:50 PM
  • 0 Comments

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் (13.05.2026) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இளையதம்பி_ஸ்ரீநாத் ஆகியோருடன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை, கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊