jaffna student achievement | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்..!

  • Jun 17, 2026 - 10:07 AM
  • 0 Comments

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது. இவ் வருடத்திற்கான விழா காலி முகத்திடல் ITC ரத்னதீப (ITC Ratnadipa) விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் வட மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த செல்வி ரூபிகா அருந்தவம் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான விருதும் சான்றிதழும் குறித்த […]

sri lankan athlete win | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

செக் குடியரசில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை வெற்றி..!

  • Jun 17, 2026 - 09:25 AM
  • 0 Comments

செக் குடியரசில் நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ தடகள சாம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த அபார வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

jaffna apartment housing | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் காணி அற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு..!

  • Jun 17, 2026 - 09:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது , அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மீள் குடியேற்ற அமைச்சசினால் 10இலட்சமாக இருந்த வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் 15 லட்சமாக அதிகரித்து பின்னர் மீளவும் தற்போது 5 […]

oil price drop | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சரிந்தது கச்சா எண்ணெயின் விலை..!

  • Jun 17, 2026 - 09:17 AM
  • 0 Comments

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17.06.2026) அமெரிக்க டொலர் 80 என்ற எல்லைக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று அமெரிக்க டொலர் 76.28 க்கு நெருக்கமான மதிப்பை எட்டியிருந்தது. அதேபோல், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 79.13 ஆகப் பதிவாகியிருந்தது. இதற்கிடையில், மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் […]

rain after 2pm | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல மாகாணங்களில் மாலை 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை..!

  • Jun 17, 2026 - 09:15 AM
  • 0 Comments

17.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 […]

jaffna drug suspects | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது..!

  • Jun 17, 2026 - 09:11 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து […]

vavuniya fraud arrests | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரி மோசடி; ஐவர் கைது..!

  • Jun 16, 2026 - 12:40 PM
  • 0 Comments

வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் குழப்பநிலை ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் தனியார் தாதியர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். […]

sea and wind alert | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடல் கொந்தளிப்பு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை..!

  • Jun 16, 2026 - 12:35 PM
  • 0 Comments

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் […]

who is election for | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் மக்களுக்கா? அரசியல்வாதிகளுக்கா?

  • Jun 16, 2026 - 12:27 PM
  • 0 Comments

வடக்கு கிழக்குக்காக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் புகுத்தப்பட்ட மாகாண சபை முறைமை இலங்கை அரசால் மட்டுமன்றி இந்தியாவாலும்கூட வேண்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை தமிழ்த் தேசிய கட்சிகள் முக்கியமாக தமிழரசுக் கட்சி நாளும் பொழுதும் வேண்டி வருகிறது. இதற்காக தாயகத் தமிழ் மக்களை இணைத்து வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தும் வலிமை இவர்களிடம் உள்ளதா? இதற்கு விடை காணப்படாதவரை மாகாண சபைத் தேர்தல் மக்களுக்கானதா அல்லது அரசியல்வாதிகளுக்கானதா என்ற கேள்வி தொடர்ந்தவாறே இருக்கும். ஊழல் […]

gold chain theft arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தங்கச் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது​..!

  • Jun 16, 2026 - 12:23 PM
  • 0 Comments

தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கட்டான, கெட்டுவெல்லேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 06 கிராம் 210 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பிரதேத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, இந்தச் சந்தேக நபர் பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல, பாதுக்கை, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊