செய்திகள் விளையாட்டு

IPL 2025-பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

  • Jan 12, 2025 - 11:26 PM
  • 0 Comments

2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியின் நிர்வாகத்தினர் இன்று இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை இந்திய பெறுமதி 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஐ.பி.எல் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • Jan 12, 2025 - 11:21 PM
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

கண்டி – தவுலகல மாணவி கடத்தலுக்கான காரணம் வெளியானது!

  • Jan 12, 2025 - 10:50 PM
  • 0 Comments

கண்டி – தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வலி.வடக்கில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் திருக்குறள் வளாகம்!.

  • Jan 12, 2025 - 12:55 AM
  • 0 Comments

வலி.வடக்கு மாவிட்டபுரத்தில் மிகப் பிரமாண்டமாக தயாராகின்றது திருக்குறள் வளாகம். 1330 குறள்களையும் என்றும் அழியாத வகையில் கருங்கற்களில் செதுக்கி அதனை நம் சமூகத்திற்கு வழங்கும் அரிய முயற்சியாக இந்த திருக்குறள் வளாகம் அமைந்துள்ளது. திருக்குறள் பற்றி வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து ஆராச்சிகள் மற்றும் ஆய்வுகள் செய்வதற்கு வசதியாக, பிரத்தியேகமாக பல வசதிகள் இந்த அரண்மனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் மகத்துவத்தை தற்கால நம் சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இங்கு தியான மண்டபம் அமைக்கப்படுகின்றது. […]

முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் – ஊடகத்துறை அமைச்சர்

  • Jan 9, 2025 - 06:18 PM
  • 0 Comments

கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

செய்திகள்

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது பஸ் சங்கங்கள் தீர்மானம்

  • Jan 8, 2025 - 03:46 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்திருந்தன […]

செய்திகள்

இப்படத்தில் உள்ள சிறுமியை காணவில்லை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள்

  • Jan 6, 2025 - 03:58 PM
  • 0 Comments

பதுளையில் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர். பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். காணாமல் போயுள்ள சிறுமியின் விபரங்கள் ; பெயர் ; இரத்நாயக்க முதியன்சேலாகே கவிசா தெவ்மணி வயது ; 16 வயது […]

செய்திகள்

சாவகச்சேரி தங்கமல்ல ரியல் தங்கம் 11 கிலோ மீட்பு

  • Jan 4, 2025 - 01:56 PM
  • 0 Comments

கடலில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னணியில் பெரிய புள்ளி இருப்பதாக ஆரம்பகட்ட விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளது

செய்திகள்

இங்கிலாந்து செல்ல முற்பட்ட தமிழர் கட்டுநாயக்காவில்கைது கைது!

  • Jan 1, 2025 - 12:19 PM
  • 0 Comments

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சந்தேக நபர் நேபாளத்திற்குச் செல்லும் இந்திய விமான சேவையில் பயணிப்பதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார், ஆனால் குடிவரவு கருமபீடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குடிவரவு கருமபீட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை […]

செய்திகள்

அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல்

  • Dec 31, 2024 - 09:59 AM
  • 0 Comments

அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஊற்கனவே தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட யூடியூப் சேனலில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp