செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியூமி ஹஸ்திக” வுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • Nov 13, 2024 - 03:05 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘பியுமா’ என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘குடு சலிந்து’ என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார். துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பியுமா’ கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் […]

உள்ளூர் செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • Nov 12, 2024 - 01:41 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் […]

உலகம்

கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி.

  • Nov 8, 2024 - 03:55 PM
  • 0 Comments

ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் பலியான நபரை கைது பொலிஸ் அலுவலர் கைது செய்ய முயன்ற போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் […]

உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

  • Nov 5, 2024 - 09:47 PM
  • 0 Comments

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]

செய்திகள்

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

  • Nov 4, 2024 - 10:44 AM
  • 0 Comments

  கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • Oct 26, 2024 - 05:01 PM
  • 0 Comments

.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comments

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம் செய்திகள்

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம்

  • Oct 20, 2024 - 11:56 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கின்றது சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சிக்கு யார் தலைவர் என்பது தான் போட்டி ஜனநாயகமாக சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின் சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார். இதனையடுத்து எழுந்த பிரச்சினை தொடர்கின்றது நீதிமன்ற இடைக்காலத் தடையால் சிறிதரனால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை. இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தது இவ்வாறான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp