உள்ளூர் செய்திகள்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

  • Dec 24, 2024 - 02:15 AM
  • 0 Comments

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து  நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பெறுப்பில் இருந்த பேரூந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார். மேலும், ஓட்டுனர் பாதுகாப்பு […]

செய்திகள்

கிராம உத்தியோகத்தரை போட்டு பிடித்த வாழைச்சேனை மக்கள்

  • Dec 23, 2024 - 03:00 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் சிலரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லையென கோரியே அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 21.12.2024

  • Dec 22, 2024 - 02:18 AM
  • 0 Comments

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர் இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது. ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம் ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் https://youtu.be/We2LjCqpMto

செய்திகள்

அரச சேவையை வினைத்திறனானதாக மாற்ற வேண்டும்-ஜனாதிபதி அநுரகுமார

  • Dec 20, 2024 - 05:32 PM
  • 0 Comments

எமது நாட்டின் அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கொழும்பில்; உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த […]

செய்திகள்

பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குங்கள் கனடாவிடம் சிவஞானம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

  • Dec 19, 2024 - 06:55 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்க வேண்டாமென அவர் சுட்டின்னாட்டியுள்ளார் சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்ப்பாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒட்டாவாவில் […]

உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை

  • Dec 16, 2024 - 04:52 PM
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்; அருச்சுனாவுக்கும் சட்டத்தரணி என். கௌசல்யாக்கும் (தங்கம்) தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

  • Dec 15, 2024 - 10:52 PM
  • 0 Comments

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்தனர். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக மற்ற […]

உள்ளூர் செய்திகள்

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை- கஜேந்திரகுமார்

  • Dec 15, 2024 - 01:46 AM
  • 0 Comments

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவையுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார் வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று […]

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comments

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை […]

செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார்

  • Dec 13, 2024 - 07:42 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். தற்போதைய சபாநாயகர் அசோக ரன்வல கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதும் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்ட போதும் தன்னை கலாநிதி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார். ஆனால் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் பி.எஸ்.சி. பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp