உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

  • Jan 14, 2025 - 10:11 PM
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கையில் […]

முக்கிய செய்திகள்

பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார், சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவிரிப்பு

  • Jan 12, 2025 - 05:27 PM
  • 0 Comments

கண்டி மாவட்டத்தின் கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு கண்டனம் வெளியிட்ட தமிழரசுக் கட்சி!

  • Jan 12, 2025 - 01:21 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (10) இந்தியாவில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கு கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல சென்றபோது, அங்கே விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு!

  • Jan 11, 2025 - 12:49 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது. மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது, உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து, குழந்தையை மீட்டு, கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்போது குழந்தை உயிரிழந்துள்ளது. இதையும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • Jan 10, 2025 - 11:45 PM
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

SJB-UNPயை இணைக்கும் பொறுப்பை ஏற்ற முன்னாள் அமைச்சர்!

  • Jan 10, 2025 - 03:23 AM
  • 0 Comments

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ராஜித சேனாரத்ன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து அரசியல் மேடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான சிறப்பு […]

முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

  • Jan 9, 2025 - 06:37 PM
  • 0 Comments

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்று (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், முதலில் மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோர் […]

முக்கிய செய்திகள்

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

  • Jan 9, 2025 - 05:42 PM
  • 0 Comments

CLEAN SRILANKA  திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஊடுநுயுN ளுசுஐடுயுNமுயு திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற […]

முக்கிய செய்திகள்

இரத்தினக்கல்,ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது

  • Jan 8, 2025 - 04:19 PM
  • 0 Comments

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி”Gem Sri Lanka – 2025″ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் ஆரம்பமானது. சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறும். இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து […]

செய்திகள்

எலிக்காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

  • Jan 6, 2025 - 05:10 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணியால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp