பாதீட்டில் செல்வம் அடைக்கலநாதன் எம்பி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் அர்சுனா எம்பி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது […]









