உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு எஸ்.சிறிதரன் எம்பி வேண்டுகோள்
நியாயமான காரணிகளை கருத்திற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கு சிறந்ததாக அமையும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (17-02-2025) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் விசேட ஒதுக்கீடு […]









