உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

  • Apr 7, 2026 - 10:25 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி ஆபாச மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, ஆவணி மாதம் அவர் தங்கியிருந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு..!

  • Mar 20, 2026 - 10:44 AM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நேற்று (19.03.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Mar 20, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]

உள்ளூர் செய்திகள்

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கை கோர் குழு’ இலங்கைக்கு அழுத்தம்.

  • Sep 10, 2025 - 09:32 AM
  • 0 Comments

இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் பிரிட்டன்;, கனடா மற்றும் ஆகிய நாடுகளின் கூட்டை உள்ளடக்கிய ‘இலங்கை கோர் குழு’(Sri Lanka Core Group) ஜெனீவா அமர்வில், மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை மையமாகக் […]

உள்ளூர் செய்திகள்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • Aug 4, 2025 - 12:09 PM
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர் செய்திகள்

யாழ். மாநகர சபையில் அடிபாடு ஆரம்பம்

  • Jun 27, 2025 - 12:37 PM
  • 0 Comments

யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற அமர்வில் கடும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார குழுவை தெரிவு செய்வது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்போது, மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சபையில் அமர்வு நடந்து கொண்டிருந்த போதே பலர் சபையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உள்ளூர் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்

  • Jun 27, 2025 - 12:20 PM
  • 0 Comments

இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

  • Jun 14, 2025 - 02:26 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்றிரவு (13-06) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளராக யாழ் மாநகரசபை உறுப்பினர் கபிலன் நியமனம்

  • Jun 14, 2025 - 02:07 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக சுந்தரமூர்த்தி கபிலனுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈபிடிபி, தமிழரசுக் கட்சி சந்திப்பிற்கு கிழக்கிலும் கடும் எதிர்ப்பு

  • Jun 6, 2025 - 08:17 AM
  • 0 Comments

டக்ளஸ் – சிவஞானம் சந்திப்பை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எமது தமிழ்த் தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட முடியாது. தமிழ்த் தேசியத் தலைவரின் கொள்கைக்கு எதிர்ப்பாக ஒருபோதும் நாம் செயற்படப் போவதுமில்லை. இது திண்ணம். கட்சியின் உயர்மட்டக் குழுவின் (மத்தியகுழு) அனுமதியில்லாமல் தனிப்பட்ட முடிவுகள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp