செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்படவுள்ளனர் -தேர்தல்கள் ஆணைக்குழு!

  • Oct 22, 2024 - 02:39 PM
  • 0 Comments

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்களாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது. குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை பெப்ரல் […]

செய்திகள்

முன்னாள் விடுதலைப் புலி போராளியான யசோதினி அரசியலில் களமாடுகின்றார்

  • Oct 22, 2024 - 05:49 AM
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான முன்னாள் போராளி யசோதினி நேற்று (21) மன்னாரில் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு வாக்கு சேர்க்கும் முனைப்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  

செய்திகள்

சம்பந்தர் போனார் கூட்டமைப்பும் போச்சு- கருணா கவலை

  • Oct 20, 2024 - 02:23 PM
  • 0 Comments

  தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது. அவரது மரணிததின் பின் கூட்டமைப்பு ; சிதறுண்டு போய்விட்டார்கள். பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போய்விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் இது தான் அதன் வரலாறாறு […]

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம் செய்திகள்

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம்

  • Oct 20, 2024 - 11:56 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கின்றது சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சிக்கு யார் தலைவர் என்பது தான் போட்டி ஜனநாயகமாக சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின் சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார். இதனையடுத்து எழுந்த பிரச்சினை தொடர்கின்றது நீதிமன்ற இடைக்காலத் தடையால் சிறிதரனால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை. இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தது இவ்வாறான […]

செய்திகள்

தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்கள் வடிவா இருக்கினமா என இன்று காட்டினர்?

  • Oct 19, 2024 - 03:31 PM
  • 0 Comments

தலைமை தாங்கினார் நா.சேனாதிராஜா இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன் டாக்குத்தர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், தே. சிவானந்தராசா ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வூதியர் கமலேஸ்வரன் புரொக்கராசி செ. டினேசன், கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இதில யார் குளத்தில் வீடு கட்டியவர்கள் என்று பாருங்கோ வாக்காளர்களே

செய்திகள்

இந்தியக் கடற்படை கப்பல் இலங்கையை வந்தடைந்தது.

  • Oct 19, 2024 - 03:20 PM
  • 0 Comments

இந்தியக் கடற்படை சொந்தமான கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் […]

விளையாட்டு

நிங்போ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் கால் வைத்தனர் செக் நாட்டின் முச்சோவா, ஸ்பெயின் நாட்டின் படோசா.

  • Oct 19, 2024 - 02:54 PM
  • 0 Comments

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெறுகின்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முச்சோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் விளையாடினார். இதில் முதல் செட்டை 2-6 என இழந்த முச்சோவா, அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரேசில் வீராங்கனை ஹதாத் மையாவை சந்தித்தார். இதில் படோசா 6-3, 6-2 […]

உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்ட்டுள்ளார்.

  • Oct 18, 2024 - 12:16 PM
  • 0 Comments

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp