ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.
பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]









