உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • Jan 10, 2025 - 11:45 PM
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

உள்ளூர்

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு!

  • Jan 10, 2025 - 01:57 AM
  • 0 Comments

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் தெரிவு! பத்தாவது பாராளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

  • Jan 9, 2025 - 05:42 PM
  • 0 Comments

CLEAN SRILANKA  திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஊடுநுயுN ளுசுஐடுயுNமுயு திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • Jan 9, 2025 - 01:40 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளையோருக்கிடையில் சாதாரணமாக போதை மாத்திரைகள் பரிமாறப்படுகின்றது

  • Jan 8, 2025 - 03:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு (07) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செய்திகள்

சர்வதேச சட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

  • Jan 8, 2025 - 11:53 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகதி;தின் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணத்தில் சர்வதேச சட்ட மாநாட்டை எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் நடாத்த தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது. செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் […]

செய்திகள்

தமிழ்த் தேசியக்கட்சிகள் 25 ஆம் திகதி கலந்துரையாட தீர்மானித்துள்ளது

  • Jan 8, 2025 - 08:35 AM
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் பாராளுமன்ற உறுபப்pனர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை (07) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் […]

உள்ளூர்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய எதிர்வு கூறல்!

  • Jan 7, 2025 - 09:30 AM
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகள் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய கும்பல்.!!!

  • Jan 6, 2025 - 11:17 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவர் கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழுவொன்று அவரை கட்டிவைத்து தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், ‘உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன். […]

செய்திகள்

சிங்களப் பெண்ணும் தமிழ் பெண்களும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

  • Jan 6, 2025 - 09:33 PM
  • 0 Comments

ரஸ்சிய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்படட உறவுகளை மீடக கோரியே சிங்கள பெண் ஒருவரும் தமிழ் பெண்கள் இருவரும் இணைந்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர் ரஸ்சிய்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், கொழும்பு வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp